Tamil News Today
அது தற்போது அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய அனைவரது பணமும் சொத்துக்களாக இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்.
தற்போது அந்த சொத்துக்களை ஏலம் விட்டு தான் மக்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியும். இதுவும் சுப்ரீம் கோர்ட்டு மூலமாக லோதா கமிட்டி அமைத்து வேலை செய்து வருகிறது. இதில் சிபியும் பங்காற்றுகிறது.
pacl tamil news
இந்த சொத்துக்களை விற்பதற்கு பகிரங்கமாக ஏலம் விட்ட போதிலும், நிறைய நிறுவனம் ஏலம் கேட்டாலும், அவர்களுக்கு சரியான தகுதி இல்லை என்ற அடிப்படையிலோ, வேறு அடிப்படையிலோ நிராகரிக்கப்பட்டது உண்மை.
இருந்த போதிலும் தற்போது பஞ்சாப் மாநில அரசாங்கமானது PACL நிறுவனத்துக்கு சொந்தமான 363 ஏக்கர் சொத்துக்களை தற்போது கேட்டுள்ளது.
இதில் அரசாங்கமே நேரடியாக கேட்டு இருப்பதால், அதை மறுப்பதற்கு எந்த ஒரு வகையிலும் வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. மேலும் இந்த தவணையை செலுத்தக்கூடிய விதங்களையும் அந்த பஞ்சாப் அரசாங்கம் அதில் குறிப்பிட்டிருக்கிறது.
pacl latest news tamil 2020
முதலில் 10 சதவீத பணத்தை செலுத்துவதாகவும், பிறகு 30% செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. முழுமையாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு அதாவது சொத்துக்கள் கைமாறியபிறகு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை தவணை தவணையாக செலுத்துவதாகவும் அது கூறியிருக்கிறது.
இருந்தபோதிலும், ஒரே தவணையாக வேண்டும் என்றாலும் அதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று லோதா கமிட்டியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது பஞ்சாப் மாநிலம்.
அதுமட்டுமில்லாமல் சில பொது நிறுவனங்களுமே, நிலங்களை கேட்டிருக்கிறது. அதாவது தனியார் நிறுவனங்கள் பல தனியார் நிறுவனங்கள் இதற்கு முன்னர் கேட்ட போதிலும், அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.
pacl latest news in tamil newspaper
இருப்பினும் தற்போது அரசாங்கம் கேட்டிருப்பது, பஞ்சாப் மாநில சொத்துக்களை. இதில் தற்போது புதிதாக (சன்லாண்ட்) போன்ற ஒரு சில பொது நிறுவனங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள சொத்துக்களை கேட்டிருக்கின்றனர்.
இவைகளும் நிராகரிக்கப்பட லாம், இல்லை என்றால் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் முக்கியமாக கருதப்படுவது, பஞ்சாப் மாநில அரசு 363 ஏக்கர் சொத்துக்களை கேட்டிருப்பது தான்.
இவை அனைத்துமே தற்போது விற்பனைக்கு தயாராக இருக்கிறது என்று கூறப்படுகிறது. காரணம் அரசாங்கமே தலையிடுவதால் இதில் மறுப்பு சொல்ல வாய்ப்பே கிடையாது.
PACL land sale proposal pdf
ஆகையால் மக்களின் அதிகபட்ச பணமானது கிடைக்க வாய்ப்பு தற்போது இருக்கிறது.
இருந்தபோதிலும் நிறைய சந்தேகங்கள் கேள்விகள் குழப்பங்கள் இருக்கின்றன. அவை அனைத்திற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்.
அதிகப்படியான பணம் மக்களுக்கு வந்தடையும் நேரம் வந்துள்ளது என்று கருதப்படுகிறது.
0 Reviews
Your rating